பிறந்திடட்டும் அன்பு மனம் !
அன்னையே உன் பாதம் பணிந்து விட்டோம்
தன்னை உணரவைத்த தாயும் நீயே
என்றைக்கும் உள்ளவள் நீ மனதில் ஈண்டு !
என்றுமே உன் நினைவு எமக்கு உண்டு
உடன் வாழ்ந்து எங்களை நீ உயர வைத்தாய் !
கடன் இந்த வாழ்வு என்று கலைத்து விட்டாய் !
திடமான மனது கொண்டு தீர்மானம் செய்வாய் !
மடமான எம்மனதை மாற்றி விட்டாய் !
சோர்வு மனம் வருகையிலே உன்னை நினைத்தால்
ஆர்வமுடன் ஊக்கம் வந்து உட்கார்ந்திடுமே !
ஊர் உலகம் போற்றும்படி உலகில் வாழ்ந்தாய் (உன் மறைவில்)
கார்கால மேகம் போல கண்ணீர் உகுத்தோம் !
அன்புக்கு நீதானே எடுத்துக்ககாட்டு !
பண்புக்கு நீதானே வகுத்தாய் பாட்டு !
துன்பம் வருகையிலே உன்னை நினைத்தால்
இன்பமாக அதுமாறி இனிமையாச்சு !
காலம் இங்கு குறைவு என்று காட்டிவிட்டாய் !
பாலமாக இருந்து எமக்கு பாதை வகுத்தாய் !
பாலத்திலே வாழுகையில் பொறுமை காத்தாய் !
மூலத்தை உணரவைத்து முதிர்வை தந்தாய் !
காமத்தின் அரசி உந்தன் காலைப்பிடித்தோம் !
சாமத்தில் எழுந்து உனக்கு சாத்திரம் வகுப்போம் !
பாமதியாய் பாட்டெழுத ஒளியைத் தந்தாய் !
நாமகெளமுதியாய் நாமம்ஓதி நலத்தைத் தந்தாய் !
காலம் காலமாக உன் கருத்து வாழும் !
தூலமாக மறைந்திடினும் உன் துதியை செய்வோம் !
கோலம் பலபோட்டு குறிக்கோளை கொண்டுவிட்டாய் !
நாலான வேதத்தின் ஸாரம் நவின்றுவிட்டாய் !
ஏமாற்றி வாழாதே என்று ஏற்ற பாடம் சொன்னாய் !
நமக்கடுத்து நமன் வருவான் என நீதி புகட்டிவிட்டாய் !
சமதமங்கள் கொண்டிருந்து சாத்திரநெறி நின்றாய் !
கமகமக்கும் சந்தனமாய் சகத்தினை மாற்றிவிட்டாய் !
பொய் வேண்டாம் எனப்புகன்று புத்தி தெளிய வைத்தாய் !
மெய் தன்னை நோய் வாட்ட புன்னகை புரிந்து நின்றாய் !
தாய் உந்தன் பொறுமைதனை சேயெமக்கு தந்திடுவாய் !
போய்விடட்டும் பகைமையது பிறந்திடட்டும் அன்புமனம் !
