புதுக்கவிதையில் ஓர் திரிவேணி சங்கமம்
புரிதல்
இரு குருனாதர்கள்
சங்கமித்தனர்
திரிவேணி சங்கமத்தில் !
பரிபுரையின் சங்கம்
புரிபட்டது நமக்கு !
கூட்டு
நமது அக்ஞானக்கூட்டை
அழிக்கத்தான்
அன்று அந்த
மெய்ஞானக் கூட்டு
நிகழ்ந்ததோ?
நவீன திரிவேணி சங்கமம்
குஹானந்தரென்னும் கங்கை
சிதானந்தரென்னும் யமுனை
ஸ்ரீவித்யை என்னும் ஸரஸ்வதி
மூன்றும் ஸங்கமித்து
திரிவேணி சங்கமம் நிகழ்ந்ததோ!
புண்ணிய காலம்
மஹோதய புண்ணிய காலம்
ஸ்ரீ வித்யைக்கு
மஹா புண்ணிய காலம்!
வெளிச்சம்
அன்றைய நாள் அமாவாசை!
ஆனால்
அன்றைய இரவு,
பத்ததிக்கு வெளிச்சம் போட்டது!
பவுர்ணமி
அபிராமி பட்டருக்கு அமாவாசை
பவுர்ணமி ஆனது
அன்னையின் மூக்குத்தியால்!
மஹாலய அமாவாசை
நமது அக்ஞான இருளுக்கு
மெய்ஞான பவுர்ணமி ஆனது
அன்றைய தீக்ஷையால்!!
தீக்ஷை
திரிவேணி சங்கமத்தில்
தீக்ஷை !
பூர்த்தியானது
அவரது அபேக்ஷை!
திருஷ்டி
சிவதிருஷ்டியால் கிடைத்தது
ஸபர்யா வாஸனையெனும் விருக்ஷம்!
விதை திரிவேணியில் கிடைத்த குருதிருஷ்டி!
அவதாரம்
முக்கண்ணால் மூட்டிய தீ
சரவணப் பொய்கையில்
சுப்ரமணியராய் அவதாரம் !
கும்பமேளாவில் மூட்டிய தீ
சென்னை பட்டிணத்தில்
சிதானந்தராய் அவதாரம்!
எங்களின் திரிவேணி
குஹன் என்னும் ஸ்ரீகுஹானந்தர்
சுப்ரமணியர் என்னும் ஸ்ரீசிதாநந்தர்
சுவாமிநாதர் என்னும் ஸ்ரீ அனந்தானந்தர்
மூவரிலும் முருகன் பெயர்!
எங்களுக்கு இதுதான்
திரிவேணி சங்கமம்!
மூழ்கிக் குளிப்போம்
முடியட்டும் பிறவி!
