மஹான் ஸ்ரீபாஸ்கர ராயர்

மஹான் ஸ்ரீபாஸ்கர ராயர்
(புதுக்கவிதையில்)
ஆதிசங்கரருக்கு
கிடைக்காத பாக்கியம்!
இவரால் கிடைத்தது
ஸவுபாக்கிய பாஸ்கரம்!
தந்திர சாத்திரம்
தூய்மையானது இவரின்
மந்திர சாத்திரத்தால்!
துறவியை வணங்கினார் வெடித்தது கமண்டலம் மட்டுமல்ல
அவரின் அஹங்காரமும்தான்!
எண்ணிவிட முடியும்
கடற்கரை மணல்துகளை
எண்ணமுடியாது
இவர் இயற்றிய நூல்களை!
கோடி கோடி யோகினிகளின்
பெயர்களைப் பாடி நின்றார்
சளைத்தது எழுதிய கைகள்
மட்டுமல்ல
அக்ஞானமும்தான்!
அன்று தரிசித்தனர் அம்பிகையை
அவரின் தோள்களில்
அக்ஞானக் கண்கள்
மாறியது குங்குமானந்தரின்
கமண்டல ஜலத்தால்!
சமய காதலனுக்கும்
கவுளக் காதலிக்கும்
திருமணம்!
செய்து வைத்தது
அவரின் எழுத்துக்கள்!
ஸ்ரீ வித்யைக்கு
அவர் ஆற்றிய தொண்டு
உபாஸகர்களுக்கு அது ஓர்
நிகண்டு!
அம்பிகை தீர்த்தாள்
அவரின் கடனை
வட்டியாக பெற்றாள்
வகைவகையான
கிரந்தங்களை!
மகார நைவேத்தியம்
மாறியது மலர்களாய்
மணம் வீசியது
மனித மனத்திலும்தான்!

96

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments