அன்னையே நீ அனைத்தும் அறிந்தவள்!
என் மனதில் உள்ளது அனைத்தும் அறிந்தவள்!
ஏன்?
என் மனதை நினைக்க வைப்பவளும் நீதான்!
இயங்க வைப்பது இயங்குவதைவிட வேறானதல்ல!
எனவே
என் மனதாக இருப்பதும் நீதான்!
நீயாக என் மனது இருப்பதால்
என் மனது நினைப்பது எல்லாம் நன்மையே!
மனது சுழல்கிறது!
அல்ல அல்ல !
நீ சுழல வைக்கிறாய்!
நான் அது அலைபாய்வதாக எண்ணி மிரள்கிறேன்!
அது அலையுமிடமெல்லாம்
அன்னையே நீ இருப்பாயாக!
விளைவு?
மனது நீயாவாய்!
அப்போது அது அலைவது என்ற பேச்சு இல்லை!
அங்கு இரண்டு இல்லை!
மனது செல்வது வருவது என்ற இரண்டு இல்லை!
மனது சொந்த ஆத்மாவான உன்னில் கரைந்து விட்டது!
ஓ அன்னையே!
நீ என் மனதாவாய்!
மனமே பிறவிக்கு வழிகோலுவது!
ஓ அன்னையே!
நீ என் மனதாவாய்!
அப்போது பிறவி அற்றுவிடும்!
மனம் நீயானால் மரணம் மாண்டுவிடும்!
ஓ அன்னையே!
நீ என் மனதாவாய்!
