நான் பிறந்தால்…….
(சமர்ப்பணம் : அனைத்து அன்னைகளுக்கும்)
இனி ஒருமுறை உந்தன் கருவறையில்
என்னை சுமப்பாயோ
என் அம்மா என்னை சுமப்பாயோ
பிறந்து விட்டேன் பலபிறவி போதுமென்றால் கேட்பாயோ
பிறந்தது போதுமென்றால் கேட்பாயோ
பத்து பத்து மாதங்களாய் பல சுமந்தாயே
சொத்து சுகம் போதுமென மறந்திடுவேனோ
நானுனை மறந்திடுவேனோ
கருக்குழியில் நான் சுருண்டுறங்க நீ
புரண்டு படுப்பாயோ மண்ணில்
புரண்டு படுப்பாயோ
போதுமென்றால் குரங்கு மனம்
கேட்பதில்லையே
உனை சிரமபடுத்த வேண்டுமென
நினைக்கவில்லையே
பிறப்பெடுத்தேன் பிறப்பெடுத்தேன்
போதவில்லையோ
இராசி பனிரெண்டும்
போதவில்லையோ
கருவினிலே சுமந்தபோதே
கருத்தை தந்தாயே
காமத்தில் வெறுப்பைத்
தந்தாயே வாழ்வில்
பொருளை தந்தாயே
நாமொன்று நினைக்க தெய்வம்
வெரொன்று என்பாரே
நான் வணங்கும் தெய்வம்
நீயுமல்லவோ எனில்
என் நினைப்பறிவாயே
வேதமொழி அறியாமல்
வெகுண்டெழுவேனே
சாதத்திலே சாத்திரத்தை
சொருகி தந்தாயே
வேதாந்தம் விளங்க வைத்தாயே
மீண்டும் நான் பிறந்தால் நீயும் பிறப்பாயோ
மண்ணில் மீண்டும் பிறப்பாயோ
இனி ஒருமுறை உந்தன் கருவறையில்
என்னை சுமப்பாயோ
என் அம்மா என்னை சுமப்பாயோ
