பாரதியின் கண்ணனும் குயிலும்
வா வா வா
கண்ணன் பாட்டில்
கண்ணன் என் காதலன் என்றான்
காதல் என்ற சொல் புனிதமானது
பாஞ்சாலி சபதத்தை
பாட்டாய் வடித்தான்
இதிகாசத்திற்கு
இன்னொரு பொருள் வந்தது
விடுதலைக்காக
கவிக்கணை தொடுத்தான்
பயந்து ஓடியது
பரங்கியரின்
பீரங்கி
குயில் பாட்டு
அது
புதுக்கவிதைக்கு
நீ் போட்ட
பிள்ளையார் சுழி
கண்ணனே எனக்கு
சேவகன் என்றாய்
நீ எழுதும் கவிதையை
முதலில் படிக்க அவன்
போட்ட நாடகம் அது
எமனே உன்னை சிறு புல்
என்றதனால்
அவசர அவசரமாய்
அழைத்தாயோ
அவசரப்பட்டு விட்டாய்
இழந்து விட்டோம்
மீதிக்கவிதைகளை
கடற்கரை வழியாய் வந்தனர்
கிழக்கிந்தியர்
கடற்கரையில் வசித்த உன்
கவிதை சுனாமி
அடித்து சென்றதோ
அவர்களை
ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
இது அன்று நீ கூறியது !
ஆயிரமாய் ஆக்கிவிட்டார்
ஜாதிப்பட்டியலை !
இன்னொரு
சுதந்திரம் தர வா வா வா
