சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
அபிஷெகம் செய்திடு பாதம் பாத்து
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
அபிஷெகம் செய்திடு பாதம் பார்த்து
பார்த்து இல்ல பாத்து
அபிஷெகம் செய்திடு பாதம் பாத்து
அந்தரத்திலே ஒரு சிந்தை மண்டபம்
அதில் பச்சை நிறத்தோடொரு அவள் மந்திரி (2)
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
அபிஷெகம் செய்திடு பாதம் பாத்து
வானத்திலே பல தேவ கூட்டங்கள்
தெம்மாங்கு பாடுறார் அவளைப்பார்த்து (2)
கானத்தில் மயங்கிடும் கந்தர்வர்கள்
மோனத்தில் மூழ்குறார் அவளைப் பார்த்து… (2)
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
அபிஷெகம் செய்திடு பாதம் பாத்து
வேதாந்தம் பேசிடும் வேதக் கிளிகள்..
பணிந்திட சொல்லுது நம்மைப்பார்த்து (2)
நாதாந்தம் நாடிடும் நல்ல முனிகள்
நேசமுடன் சொல்கிறார் நம்மை பார்த்து… (2)
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
அபிஷெகம் செய்திடு பாதம் பாத்து
ஆகாச கங்கையும் ஆடியின் பொன்னியும்
அருகினில் இருக்குது நம்மைப் பார்த்து (2)
பேசாத பேச்சுக்கள் பிறவாத ஜன்மங்கள்
ஆசையைப் போக்குது நம்மைக் கேட்டு (2)
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
அபிஷெகம் செய்திடு பாதம் பாத்து
