படம் : கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
சந்தன மாலையை
கண்ணனுக் கணிவித்தேன்
மாயமா இது மாயமா
தொல்லை இல்லை சொல்ல ஒரு கணம்
போதும்
கள்ளமில்லா சிரிப்பை
காணுவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம்
வேண்டும்
என்ன பண்ணப் போகிறாய்
சந்தன மாலையை
கண்ணனுக் கணிவித்தேன்
மாயமா இது மாயமா
கோதையின் கேள்விக்கு கண்ணனின் பதில்
என்ன மௌனமா மௌனமா
கண்ணா எந்தன் கவிதை சொல்ல
சேதி ஒன்று போதுமே
உன்னை என்னுள் காண ஒரு
பிறவி ஒன்று வேண்டுமே
பதைபதக்கும் முன்னாடி
உந்தன் உருவம் காட்டடா
விதவிதமாய் சந்தம்
இருக்குது முன்னாடி
கயிறாலுன்னை கட்டியடி
தாளுந்தன் தாய் முன்னாடி
வா என்று சொல்லடா கண்ணே
இல்லை என்னை வாழ்த்தடா கண்ணே
எந்தன் வாழ்வையே
உன்னிடம் தருவித்தேன்
என்னை மாற்றாதே
உயர்கதி தாராயே
கடிந்தென்னை சொன்னாலும்
மடியாது என் மனம்
பூவாசம் வீசும் உந்தன் பொன்மேனி
இருளிலே பிறந்தாலும் எனக்
கருளினை தருவாயே
ஒளி தரும் உந்தன் கண்களடா
பல உலக பக்தர்கள் கூடி
உன் பாதம் சேர்ந்தோம் கூடி
என் உயிர் சுடரே
இன்னும் தயக்கம் என்ன
அருளினைத் தருவாயா
இது உலகா உருவா

மிக அழகான வலைத்தளம். உங்கள் கவிப்படைப்புகளை ஒரே இடத்தில் காண வைத்த உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது..
வாழ்க வளர்க உங்கள் தொண்டு..
நன்றி.