மெட்டு : கண்ணே கலைமானே
கண்ணா உனைத் தானே
தனிமையிலுனை
கண்டேன் அருள் வாயே
பந்தமனை அதைநான்
துறக்கிறேன்
சொந்தமாக உனை நான்
நினைக்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ
ஆமை என்றால் அதுவுமுன் வடிவு
பாமை அவளுன் பக்கத்தில் மனைவி
நீயோ களிப்போடு கண்படும் அழகின்
வடிவோடு
இன்றே எந்தன் விதி மாறுது பாதை
போட்டு பலன் தந்தது
(கண்ணா)
சாதல் துறந்தேன் சாத்திரம் படித்தேன்
கண்ணனே உனை நான் கோயிலில்
பார்த்தேன்
உனக்கே உறவானேன் கண்ணாலே கருணை தருவாயே
நீயில்லாமல் எது என்மதி என்றும் நீதான் என் திருநிதி
(கண்ணா)
