இந்த பாடல் என் தந்தையார் எழுதியது.
என்னவளே அடி என்னவளே
எந்தன் மனமதை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இரண்டையும் மறந்து விட்டேன் உந்தன்
கால் கொலுசில் அது தொலைந்தென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
கண்டாலங்கு தேவர்களின் பெருங்கூட்டம்
கண்டு கொண்டேன்
என்னவளே அடி என்னவளே
எந்தன் மனமதை தொலைத்து விட்டேன்
வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி
வேதாந்தமும் நாதாந்தமும்
வேறுவேறு இல்லையடி
நான்
வாழ்வதும் வீழ்வதும் போவதும் உந்தன்
பாதங்களில் தான் உள்ளதடி
என்னவளே அடி என்னவளே
எந்தன் மனமதை தொலைத்து விட்டேன்
கொற்றவளே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்பிட்டு விழுந்திடுவேன்
கோபுரமே உனைக்கண்டு
கோடி வணக்கம் கும்பிடுவேன்
உன் காலடி எழுதிய கோலங்கள் புதிய கவிதைகள் என்றுரைப்பேன்
என்னவளே அடி என்னவளே
எந்தன் மனமதை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இரண்டையும் மறந்து விட்டேன்
