அடி ஆத்தாடி…

மெட்டு : அடி ஆத்தாடி.
அடி ஆத்தாடி…
அடி ஆத்தாடி
இந்த மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே
நிஜந்தானா
அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே
அருள்தானா
குருவோடு
உறவாடும்
ஒரு கோடி ஆனந்தம்
இவன் அகம் காண யாரோ காரணம்
அடி ஆத்தாடி…
அடி ஆத்தாடி
இந்த மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே
நிஜந்தானா
அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே
அருள்தானா
வாழ போகும் போகம் எல்லாம் கட்டுப்பட்டு நிற்காதோ
மண்ண பார்த்து மோஹம் எல்லாம் விட்டு போகக் கூடாதோ
இப்படி நீ ஆனதில்ல
புத்தி மாறிப் போனதில்ல
முன்ன பின்ன நேர்ந்ததில்ல
மாயை இனி சேர்க்கவில்ல
எண்ணி எண்ணி உள்ளுக்குள்ள
புத்தி மாற கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள பாறாங்கல்லாய் ஆனாயோ
வசை கேட்பாயோ
நின்னுபோன மனசுக்குள்ள. ஏகப்பட்ட
சந்தோஷம்
உண்ம சொல்லு மனமே என்னை
என்ன செய்ய உத்தேசம்
வார்த்த ஒன்னு நின்றிருக்கும்
வந்து வந்து போவதென்ன
கட்டுப்பட்ட பூமனது ஆசப்பட்டு ஆவதென்ன
மட்டு மரியாதையாக மல்லுக்கட்டி
நிற்பாயோ
விட்டுவிட்டு ஓட்டம் நிறுத்த
தூக்கங்கெட்டுப் போவாயோ
சொல் என்மனதே
அடி ஆத்தாடி…
அடி ஆத்தாடி
இந்த மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே
நிஜந்தானா
அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே
அருள்தானா
குருவோடு
உறவாடும்
ஒரு கோடி ஆனந்தம்
இவன் அகம் காண யாரோ காரணம்
அடி ஆத்தாடி…
அடி ஆத்தாடி
இந்த மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே
நிஜந்தானா
அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே
அருள்தானா

197

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments