மெட்டு : நீலவான ஓடையில்
தூல மான உடலினில் புகுந்துநின்ற
குருவரா
தூல மான உடலினில் புகுந்துநின்ற
குருவரா
நான் வரைந்த பாடல்கள் வானம் பாத்த
மண்ணிலா
வராமல் வந்த என் ஆவி
தூல மான உடலினில் புகுந்துநின்ற
குருவரா
—
காளிதாசன் பாடினான் மேகதூதமே
சீடன்நான் பாடுவேன் நாதன் கீதமே
மனதினில் வான்வெளி தோன்றிடும் சங்கரி
மனதினில் வான்வெளி தோன்றிடும் சங்கரி
நீ இல்லையேல் நான் இல்லையே பாடல் நான் பாடும் நேரம்
—
தூல மான உடலினில் புகுந்துநின்ற
குருவரா
நான் வரைந்த பாடல்கள் வானம் பாத்த
மண்ணிலா
வராமல் வந்த என் ஆவி
—
நானும் நீயும் நாளைதான் வாலை நாடலாம்
வானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம்
விழியில் ஏன் தாபமோ பிரமமோ தேடவோ
விழியில் ஏன் தாபமோ பிரமமோ தேடவோ
ஸ்ரீவித்தையே என் ஆவியே எங்கே நீ அங்கே நான்தான்
—
தூல மான உடலினில் புகுந்துநின்ற
குருவரா
தூல மான உடலினில் புகுந்துநின்ற
குருவரா
நான் வரைந்த பாடல்கள் வானம் பாத்த
மண்ணிலா
வராமல் வந்த என் ஆவி
