மெட்டு : இது குழந்தை பாடும் தாலாட்டு
தினம் குருவைப் போற்றி பாராட்டு
அது பிறவி தோறும் காப்பாற்றும்
இது மாய்கை தோன்றும் இதயம்
இது நிலையில்லாத உலகம்
இது நிலையில்லாத உலகம்
( இசை )
தடை அகற்றும் கால்கள் தன்னை
திடமனதால் போற்றுறேன்
கடகடத்து போகும் உடலை
நாள் தோறும் சுமக்கிறேன்
பரபரக்கும் உறவை மனதில்
தினந்தினம் நான் மதிக்கிறேன்
தரமிலாத மாயையை எண்ணி
தரணியிலே உழல்கிறேன்
தினம் குருவைப் போற்றி பாராட்டு
அது பிறவி தோறும் காப்பாற்றும்
இது மாய்கை தோன்றும் இதயம்
இது நிலையில்லாத உலகம்
இது நிலையில்லாத உலகம்
கூறும் ஒலியில் கரம் கொண்டு
பூமாலை தொடுக்கிறேன்
விடும் மூச்சில் வளி கொண்டு
கலை ஒன்றை காண்கிறேன்
படித்து விட்ட துதியை கூட
மறந்து போக பார்க்கிறேன்
தரமிலாத மாயையை எண்ணி
தரணியிலே உழல்கிறேன்
தினம் குருவைப் போற்றி பாராட்டு
அது பிறவி தோறும் காப்பாற்றும்
நலம் விளையும் என்ற பின்னே
அவரை நான் நினைத்தது
தரமிகுந்த தாளில் எந்தன்
மனதை நான் கொடுத்தது
துயர்மிகுந்த வாழ்வைக் கண்டு
தாளை நான் பஜிப்பது
துயர்மிகுந்த வாழ்வைக் கண்டு
தாளை நான் பஜிப்பது
ஒரு வழியாய் மனதினிலே
உத்தமனை நான் காண்பது
தினம் குருவைப் போற்றி பாராட்டு
அது பிறவி தோறும் காப்பாற்றும்
இது மாய்கை தோன்றும் இதயம்
இது நிலையில்லாத உலகம்
இது நிலையில்லாத உலகம்
