பாடல் மெட்டு : புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
சக்தியுள்ள மனிதரெலாம் முக்தி காண்பதில்லை
முக்தி கண்ட மனிதரெலாம் சக்தியாள ரில்லை
குணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் குணமிருப்பதில்லை
குணம் படைத்த மனிதருக்கு சொந்தமெல்லாம் கடவுள்
குணம் இல்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் பந்தம்
சக்தியுள்ள மனிதரெலாம் முக்தி காண்பதில்லை
முக்தி கண்ட மனிதரெலாம் சக்தியாள ரில்லை
கருவம் இல்லா மனிதருக்கு சாதல் என்றுமில்லை
சாதல் வரும் போதினிலே சகம் இருப்பதில்லை
மனம் இறந்த அனைவருமே மீண்டும் பிறப்பதில்லை
மீண்டும் பிறக்கும் மனிதருக்கு சுகமேதும் இல்லை
சக்தியுள்ள மனிதரெலாம் முக்தி காண்பதில்லை
முக்தி கண்ட மனிதரெலாம் சக்தியாள ரில்லை
கனவு காணும் மனிதனுக்குள் நினைத்துபார்ப்ப தாரு
அவன் காணுகின்ற கனவினிலே
சாட்சியாவ தாரு
அவன் கணவில் அவள் வருவாள், அவனை பார்த்து அருள்வாள்
அவள் அருளை யார் பெறுவார், யாரை பார்த்து அருள்வாள்?
சக்தியுள்ள மனிதரெலாம் முக்தி காண்பதில்லை
முக்தி கண்ட மனிதரெலாம் சக்தியாள ரில்லை
பாடியவர்: திரு.ம.சுரேஷ் என்கிற சூர்யா
கிடாருடன் பாடியவர் : திரு.சதீஷ், சென்னை
