மெட்டு : பூங்கதவே தாழ் திறவாய்
பொன்மனமே தாள் பணிவாய் பேயாய் ஏன் அலைவாய்
விண் ஓலை வந்திடும் பேயாய் ஏன் அலைவாய்
(பொன்மனமே)
தேரோட்டம் பாரோடும் வாசல் கதவுகள் திறக்கும்
ஆஹாஹா ஆனந்தம் ஓடும் நினைவுகள் ஓய்ந்திடும்
சாதல் தெய்வம் தான் மாற்றும்
வேதத்தில் கூறிய நாதம்
(பொன்மனமே)
திருக் கோலம் எனக்காகும் தேனில் நனைத்திடு அவன் பாதம்
எந்நேரம் தேவதை கூடும் ஆரணம் எங்கெங்கும்
காலை தேடும் விண்ணகரம்
மங்கல வாழ்த்தொலி கீதம்
(பொன்மனமே)
