நாராயணீயம் – தமிழ்ப்பாடல் வடிவில்-2

Dasakam: 001 — Shlokam: 02

एवंदुर्लभ्यवस्तुन्यपि सुलभतया हस्तलब्धे यदन्यत्
तन्वा वाचा धिया वा भजति बत जन: क्षुद्रतैव स्फुटेयम् ।
एते तावद्वयं तु स्थिरतरमनसा विश्वपीड़ापहत्यै
निश्शेषात्मानमेनं गुरुपवनपुराधीशमेवाश्रयाम: ॥ २ ॥

ஏவம் து₃ர்லப்₄யவஸ்துந்யபி ஸுலப₄தயா ஹஸ்தலப்₃தே₄ யத₃ந்யத்
தந்வா வாசா தி₄யா வா ப₄ஜதி ப₃த ஜந: க்ஷுத்₃ரதைவ ஸ்பு₂டேயம் |
ஏதே தாவத்₃வயம் து ஸ்தி₂ரதரமநஸா விஶ்வபீடா₃பஹத்யை
நிஶ்ஶேஷாத்மாநமேநம் கு₃ருபவநபுராதீ₄ஶமேவாஶ்ரயாம: ||2||

மனிதா உனக்கேன் வீண் அலைச்சல்
கனிவுடன் கண்ணன் குருவாயுரிலிருக்க (ம)

வேறு தெய்வம் கிடைக்குமோ இவனைப்போல் எளிமையாய்
எங்கெங்கு தேடினாலும் எமக்கு கிடைக்குமோ (ம)

உடலாலும் சொல்லாலும் மனதாலும் வணங்க
கடல் போன்ற கருணை கைவசம் இருக்க
தடையெல்லாம் தகர்க்கும் தயவுடன் தாங்க
இடையன் இவனைவிட இறைவன் வேறுண்டோ (ம)

அந்தோ பரிதாபம் தஞ்சமடையா தாபம்
சுந்தர வதனன் சூக்கும ரூபன்
இந்த வடிவில் இங்கே குருவாயூரில்
அந்தராத்மாவாக அருகில் ஆர்வமுடன் இருக்க (ம)

117

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments