மனக் கயிறு!

எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம் என்று நினைத்து இறைவா உன் ஆலயம் வந்தேன் ! அங்கிருந்த மரத்தில் ஆயிரம் பிரார்த்தனைக் கயிறுகள்! மனம் கயிறு போல் லேசானது! 9

Continue Reading

புதின வாழ்க்கை!

புதின வாழ்க்கை! (பொன்னியின் செல்வன் கதா பாத்திரங்கள் உணர்த்தும் வாழ்க்கைத் தத்துவங்கள்)   நாளைக்கு காலையில நாம எழுந்திருப்போமா தெரியாது வாளை சுழற்றி வந்தியத் தேவன் போல வீண் சண்டை நமக்கெதற்கு?   வாயால் முணுமுணுப்பு நாராயணா என்று ஆழ்வார்க்கடியான் போல் நோக்கம் வேறொன்று நடிப்பெதற்கு?   கல்யாணம் செய்து கொண்டு வாழ்ந்தாலும் நாளும் உறவோடு வீண் சண்டை நந்தினி போல் நாவெதற்கு?   சகோதரன் என்னவானான் தினம் கவலை, தின்னும் உணவினிலே ருசியில்லை குந்தவை போல் […]

Continue Reading

மாறிப் போன ஒலகம் !

குறவன் ஒலகம் போற போக்க பார்த்தையா குறத்தி? நிலவரம் ஏதும் எனக்கு புடி படலயே குறத்தி! குறத்தி ஆமாம் உண்மை அதுல எதும் சந்தேகமா குறவா? நாம வாழ்ந்த ஒலகம் வேற புரியுது குறவா! குறவன் ஆத்தா அப்பன் பேச்ச கேட்டு வளர்ந்தோமே குறத்தி சோத்த கூட சுவிக்கி தருது உடல் நோவுதான் குறத்தி குறத்தி பெரியவங்க வந்து நின்னா கால தொடுவோம் குறவா பெத்தவங்க முன்பு கூட கால் மேல காலுதான் குறவா குறவன் அன்பென்னும் […]

Continue Reading

குழந்தைப் பாட்டு

குழந்தைகளே குழந்தைகளே இங்கே வாருங்க அழுகையை நிறுத்தி விட்டு கவிதை கேளுங்க பெரியோரின் அறிவுரையை ஏற்று வாழுங்க தரிசு நிலம் கை பட்டால் தங்கம் ஆகுங்க   கைபேசி காலமிது தெரிந்து கொள்ளுங்க தை மாதம் பிறந்து விடும் வழியைப் பாருங்க பொய் பேசா கொள்கையினை பழகிக் கொள்ளுங்க தொய்வில்லா மனம் தன்னை துணையாய்க் கொள்ளுங்க   தமிழ் மொழியை வாழ வைத்த ஒரு தாத்தா இருக்கின்றார் தமிழ்ச் சுவடி நூலெல்லாம் நம்மை அறியச் செய்தவர் அமிழ்தினும் […]

Continue Reading

எங்கோ இருந்த புறா !

(பத்து பனிரெண்டு வருடங்கள் முன்பு நான் எழுதிய இந்த வசனக் கவிதையை பாதுகாத்து எனக்கு அனுப்பிய லதா மன்னிக்கு நன்றிகள் உரித்தாகுக) அந்தி சாயும் வேளையிலே ஆங்கொரு காக்ஷி’ ஆங்காங்கு அலைகின்ற பாங்கான புறாக்கள் இரண்டு   தாங்காத மகிழ்ச்சியிலே தினைத்து நின்றன போலும்! எங்கள் மாடியிலே தேங்கின கோடியிலே ! ஆங்கிரண்டு முட்டையினை அந்த புறா இட்டிடவே அதுவே எங்கள் பேச்சாகி பொதுவாகிப் போனதுவே ! பெண்புறா அடைகாக்க ஆண்புறா அதனருகில் ! கல்யாண மறுநாளே […]

Continue Reading

தீபாவளி ஹைக்கூக்கள்

தீபாவளி அன்று விளக்கு ஏற்ற வேண்டும் தெரு ஓரத்துக் கடையில் அழகான அகல் விளக்கு வாங்கினேன் ஒளி பிறந்தது ஒரு ஏழைக் குடும்பத்தில் ! தீபாவளி அன்று பட்டாசு வெடி வெடிப்போம் அந்த சத்தத்தில் காதில் விழாமல் போகட்டும் சண்டை பூசல்கள் ! ஒளியின் பிரகாசத்தை உள் வாங்கட்டும் மனது! அமேசானில் தளத்தில் தீபாவளித் தள்ளுபடி தருகிறார்கள் ! புடவை ஆர்டர் செய்யலாமாவென்று கேட்கிறாள் நெய்யும் நெசவாளர் மகள் ! அவர்நெய்த புடவைதான் அவையென்று அவளுக்கு தெரியாது! […]

Continue Reading

பரமானந்த சுரங்கம் !

தோண்ட தோண்ட வற்றாத சுரங்கம் ஒண்ணு இருக்குது வேண்ட மட்டும் அள்ளிக் கொள்ளு வித விதமாய் இருக்குது   வேதம் நாலு அங்கம் ஆறு சாத்திரங்கள் இருக்குது நாதத்தாலே அறிந்து கொள்ள நல்ல ராகம் இருக்குது   பத்மநாப சுவாமி அதன் மேலே படுத்து கொண்டு உறங்குறார் உத்து உள்ளே பார்த்து நின்றால் உண்மையதை விளக்குறார்   வெளிச் செல்லும் ஐம்புலனை உள்ளே கொஞ்சம் திருப்பிடு பளிச்சென்று பிரகாசிக்கும் பொன்னு ஜொலி ஜொலிக்குது   நான் என்ப […]

Continue Reading

துர்க்கைத்துதி எழுநூறு (11-37)

தஸ்தௌ கஞ்சித்ஸ காலம் ச முனினா தேன ஸத்க்றுதஃ| இதஶ்சேதஶ்ச விசரம்ஸ்தஸ்மின் முனிவராஶ்ரமே ||11|| 11. வாவென்று முனிவர் அழைக்க தாவுகின்ற பரியை அகன்று மாவுலகம் ஆண்ட மன்னன் ஆவலுடன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு கானகத்தில் நிலையின்றி மனம் தவித்தான்! ஸோ‌உசின்தயத்ததா தத்ர மமத்வாக்றுஷ்டசேதனஃ| ||12|| மத்பூர்வைஃ பாலிதம் பூர்வம் மயாஹீனம் புரம் ஹி தத் மத்ப்றுத்யைஸ்தைரஸத்வ்றுத்தைஃ ர்தர்மதஃ பால்யதே ன வா ||13|| ன ஜானே ஸ ப்ரதானோ மே ஶூர ஹஸ்தீஸதாமதஃ மம […]

Continue Reading

கல்கியின் செல்வன் !

  பொன்னி நதிக்குக் கூட தெரியாது அவன் தன் செல்வன் என! புரிய வைத்தவர் கல்கி!   அருள்மொழி வர்மன் என்ற வரலாற்றுப் பெயரை பொன்னியின் செல்வன் என்ற புதுமை பெயராக்கி புதினத்தால் தந்த செல்வன் கல்கி!   கல்கியின் வந்தியத் தேவன் ஆடிப்பெருக்கைப் பார்த்த விதத்தைப் படித்திருந்தால் நிஜ வந்தியத் தேவனே பொறாமை பட்டிருப்பான்!   புதினத்தின் புதுமையிலும் புதுமை ஆழ்வார்க்கடியானின் அறிமுகம்!   கல்கியின் ஆழ்வார்க்கடியான் நாராயணா என்றால் கடவுளே இதோ வருகிறேன் என்பார் […]

Continue Reading

ஸ்ரீ சியாமளா போற்றி செய்யுள்

ஸ்ரீவாக்தேவ்யை நம ஸ்ரீ சியாமளா போற்றி செய்யுள் (போற்றுபவன் – நாகசுந்தரம்) (சந்தம் – சியாமளா தண்டகம்)   கல்வியின் செல்வமே காத்தருள் நித்தமே எல்லாவகை ஞானமும் எனக்கருள் செய்வையே பொல்லாத வினையகல பூதமாய் சூழ்கையில் வில்லாதி வில்லனும வேதனை அடைவனே நில்லென்று மனதினை நிறுத்தியே வைத்திட்டேன் உள்ளத்தில் வந்துமே ஊக்கத்தை தருவையே அள்ளவும் குறையாத அழகான வடிவமே கள்ளமில் காதலை கருத்தினில் கொண்டனே எள்ளளவும் நீங்காது என்னிலே நிற்பையே தள்ளாது தயங்காது தண்ணருள் தருவையே அன்னை […]

Continue Reading

கணபதி எந்தன் ஸத்குரு !

கஷ்டம் வந்தால் அவன் காலடியை கட்டிப் பிடிப்பேன் இஷ்டமுடன் என்னருகே வந்து கையைப் பிடிப்பான் வேதாந்த சாத்திரங்கள் உணர்ந்திட வைப்பான் பேதமில்லா அத்துவிதம் பாடம் சொல்லுவான் உன்னுள்ளே இருக்குது பார் உவகை என்பான் என்னுள்ளே நின்று கொண்டு என்னைத் தருவான் உலகில் உள்ள இன்பமெல்லாம் உடனே தருவான் கலகம் செய்யும் கொடு மனதை நின்றிட வைப்பான் உவந்த சீடன் நீ என்றே உண்மைகள் சொல்வான் கவர்ந்து எந்தன் உள்ளமதில் காட்சி கொடுப்பான் மந்திரங்கள் தந்திரங்கள் மனதுள் பதிப்பான் […]

Continue Reading