வேசம் எல்லாம் கண்ணே, போக வேண்டாம் சொன்னேன்!

தற்காலத்தில் போலியான உருவங்களில் மயக்கும் பொய்யர்களிடம் மயங்கி விழுந்துள்ளார் மக்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கவி முயல்கிறார். “மாடு மேய்க்கும் கண்ணே” மெட்டில் பாடலாம் கவி: வேசம் எல்லாம் கண்ணே நீபோக வேண்டாம் சொன்னேன் ஏமாறும் மனிதர்: போக வேணும் கவியேதடை சொல்லாதே நீயே கவி: மெய்யான நூலு தரேன்; வலுவான மனமும் தரேன்கை நிறைய கவிதை தரேன்:பொய்யினிலே மயங்க வேண்டாம்(வேசம் எல்லாம் கண்ணே நீபோக வேண்டாம் சொன்னேன்) ஏமாறும் மனிதர்: மெய்யான நூலு வேண்டாம்; வலுவான […]

Continue Reading

அகவை நிறைவில் அகத்தில் ஓர் சிந்தனை!

என் பெயரில் அழகு இருக்கிறது, ஆனால் நான் அழகானவனா என்பது எனக்குத் தெரியாது! நான் குறைவாகப் பேசுவேன் என்கிறார்கள், ஆனால் நான் யாரையும் குறைவாகப் பேசுவதில்லை! பொதுவாக நான் யாருக்கும் சென்று வலிய உதவி செய்தவனில்லை, ஆனால் நான் யாருக்கும் கேட்ட உதவிகளை மறுத்தவன் இல்லை! எனக்கு கூட்டம் பிடிக்காது ஆனால் தனிமையும் பிடிக்காதே! என்ன செய்வது? எனக்கு சாமர்த்தியம் இல்லை என்கிறார்கள், தர்மத்திற்கு புறம்பானது சாமர்த்தியம் என்றால் அந்த சாமர்த்தியம் எனக்கு வேண்டாம்! நான் வேதாந்தி […]

Continue Reading

தன்னை அறிய வேண்டும்…

தன்னை அறிய வேண்டும் ராகம் : சங்கராபரணம் தன்னை அறிய வேண்டும் தரணியில் என்ன வேண்டுமானாலும் செய்து (த) மண்ணிலே பிறக்காமல் இறக்காமல் இருக்கவும் எண்ணிலா கடமையில் கிடந்துழலாமல் இருக்கவும் (த) ஆயிரம் சாத்திரம் அறிந்தாலும் அடையாது பாயிரம் பலவும் பாடினாலும் புரக்காது வாயினால் மந்திரம் ஜபித்தாலும் லபிக்காது மாய்கையை வென்றிட மகத்துக்கள் சொன்னபடி (த) ஐம்புலன் தன்னை அடக்குவதோ ஆகாது கிம்புருடர் கின்னரர் தேடியும் கிடைக்காது அம்பிகை அருளால் அகத்துள்ளே அமிழ்ந்து நம்பிக்கை வைத்து நல்குரு […]

Continue Reading

எதிர்பார்ப்பு

இறைவா நான் உன்னை நேசிக்கிறேன் அதனால் நான் விரும்பிய வற்றுக்கெல்லம் மேலாக நீ அளிப்பதனால் என் நேசிப்பு எதிர்பார்ப்போடு ஆகிவிடுமோ என்று தோன்றுகிறது. நான் இனி எதையும் விரும்பப்போவதில்லை, என் நேசிப்பு நிஜமானது என்று நீ ஒப்புக்கொள்ளும் வரை. (ஒப்பீடு : திருக்குறள் : உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர்.) 30

Continue Reading

மகனிடம் ஓர் மன்னிப்பு

மகனே என்னை மன்னித்து விடு பத்து மாதம் வயிற்றில் சுமக்காததற்கு!   மகனே என்னை மன்னித்து விடு, இரத்தத்தை தாய்ப் பாலாய் தராமல் இருந்ததற்கு!   மகனே என்னை மன்னித்து விடு, விளையாடும் பருவத்திலே பள்ளிக்கு அனுப்பியதற்கு!   மகனே என்னை மன்னித்து விடு, நண்பருடன் ஊர் சுற்ற தடைக்கல்லை போட்டதற்கு!   மகனே என்னை மன்னித்து விடு, உத்தியோகம் பார் என்று அதிகாரம் செய்ததற்கு!   மகனே என்னை மன்னித்து விடு, காதலா என்று கேட்காமல் […]

Continue Reading

நினைவுகள்

நேற்றைய நினைவுகளை தொலைத்து விடேன், இன்றைய தொடக்கம் நன்றாக இருக்கட்டும். நாளையின் நினைவுகளை தொலைத்து விடேன் இன்றைய பொழுது இனிமையாய் கழியட்டும். காதலின் நினைவுகளை தொலைத்து விடேன், அவளாவது நிம்மதியாய் இருக்கட்டும் துரோகத்தின் நினைவுகளை தொலைத்து விடேன், மனதின் வலியாவது ஆறட்டும் துக்கத்தின் நினைவுகளை தொலைத்து விடேன் தொடர்வது இன்பமாய் இருக்கட்டும். முதுமையின் நினைவுகளை தொலைத்து விடேன் இளமையின் துள்ளல் துவங்கட்டும்.     22

Continue Reading

நிகர் இல்லை

அன்னைக்கு நிகரான அன்பு இல்லைதந்தைக்கு நிகரான ஆசான் இல்லைமனைவிக்கு நிகரான மகிழ்ச்சி இல்லைமகனுக்கு நிகரான இடமும் இல்லைமகளுக்கு நிகரான பாசம் இல்லைஅத்தைக்கு நிகரான சொல்லும் இல்லைமாமனுக்கு நிகரான தோளும் இல்லைநண்பனுக்கு நிகரான புத்தகம் இல்லைஆசானுக்கு நிகரான கருணை இல்லைதம்பிக்கு நிகரான துணையும் இல்லை மந்திரிக்கு நிகரான புத்தியும் இல்லைகுதிரைக்கு நிகரான வாகனம் இல்லைநாய்களுக்கு நிகரான நன்றி இல்லைபொய்யிக்கு நிகரான பாவம் இல்லைகைகளுக்கு நிகரான ஆயுதம் இல்லைகால்களுக்கு நிகரான வேகம் இல்லைகண்ணுக்கு நிகரான கூர்மை இல்லைவாய்மைக்கு நிகரான வலிமை […]

Continue Reading

குருவின் கருணை

காசி ! புனிதமான க்ஷேத்திரம்! உலகிற்கே படியளக்கும் அன்னபூரணிவசிக்கும் இடம்!காலபைரவர் சன்னதியும்ஆலஹாலத்தை அருந்தியமுக்கண்ணாரின் சன்னதியும் கொண்டது! கங்கையில் நீராடும் பக்தர் குழாம்! காலை நேரம்!ஆ! அங்கே கங்கைகரையின் ஓரத்தில்ஓர் மண்டபம் தெரிகிறதே! ஆசார்ய பீடத்தில் ஆதி சங்கரர் வீற்றிருக்கிறார்எதிரே அவரின் சிஷ்யர் குழாம், கட உபனிஷத்பாடத்தை கேட்க விரும்பி உட்கார்ந்திருக்கிறார்கள். நேரம் ஓடிகொண்டிருக்கிறது! பாடம்ஆரம்பித்தபாடில்லை. சிஷ்யர்களிடம் சலசலப்பு! “இன்றைக்கு என்ன ஆயிற்று! பாடம் ஆரம்பிக்கவில்லையே!” ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதுஆசார்யாளுக்கு புரியாமல் இல்லை.ஸர்வக்ஞராயிற்றே! ஆசார்யாளின் மவுனம் கலைந்தது! “கிரி வரட்டும்! […]

Continue Reading

அடிமை ஆனேனே

ராகம் : நாட்டைக்குறிஞ்சிஎழுத்து : நாகசுந்தரம்குரல் : ஸ்ரீமதி அபர்ணாகிருஷ்ணன் பல்லவி அடிமை ஆனேனே அம்பலத்தாடும் அந்த சிவனுக்கு அன்றே நான் (அ) அனுபல்லவி சத்குருவாய் வந்து சொன்னாரே மந்திரம் புத்தியாம் பொன்னம்பலத்தாடும் சிவனுக்கு (அ) சரணம் சொந்தமாய் சிந்திக்க சுயபுத்தி சிறிதுமில்லை பந்தத்தில் உழன்றாலும் பற்று விலகவில்லை சந்தத்தில் கவிபாட சந்தக்கவியோகி நானில்லை மந்தனாம் மனதினில் மாய்கை புகுமுன்னே (அ) சொன்ன சொல் ஸோஹம் சொரூபம் ஆனேனே இன்னொரு பிறவிக்கு ஏதும் பாக்கியில்லை மன்னரும் மாந்தரும் […]

Continue Reading

வள்ளல்களே தில்லிக்கு வாருங்கள்

மயில் ஆடுகிறது குளிர்கிறதாம். பேகனே நீ மறுபிறவி எடுத்துவிடு உன் போர்வையுடன். எங்கள் சிற்றில்லத்தில் முல்லை படர இடமில்லை. பாரியே நீ மறுபிறவி எடுத்துவிடு உன் தேருடன். வெளியில் செல்லவேண்டும், ஆனால் கடும் குளிர். கர்ணனே நீ மறுபிறவி எடுத்துவிடு, உன் கவசத்துடன். கடும் குளிரில் கடும் பசியுடன் தெருவில் ஏழைகள் இறக்கிறார்கள் அதியமானே நீ மறுபிறவி எடுத்துவிடு உன் நெல்லிக் கனியுடன் கடுஞ்சொல் கூறி கடக்கிறார்மனிதர் கருணைஇன்றி காரியே நீ மறுபிறவி எடுத்து விடு உன் […]

Continue Reading

காமாட்சி நாயகன்

கண்டா காமாட்சி நாயகன் கதை கண்டா காமாட்சி நாயகன் என்ற சொல்லை உங்களில் சிலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். நேராய் பார்க்கும்போது நன்றாக பழகுவார்கள் பேசுவார்கள். நகர்ந்து போனதும் அடுத்த நிமிடம் நம்மைப்பற்றி நினைக்க மாட்டார்கள். அப்படிபட்டவர்களை அவன் என்னப்பா கண்டா காமாட்சி நாயகன் என்பார்கள். ஏன் அப்படி என்று யோசித்தேன். காமாட்சி நாயகன் யார்? பரமசிவன். அவர் ஆசு தோஷி. அவரைக் குறித்து யார் தவம் செய்தாலும் அவர் மனம் இரங்கி விடுவார். அப்படி வரம் பெற்றவர்கள் அப்புறமாய் […]

Continue Reading

கரப்பான் பூச்சியும் புது மாப்பிள்ளையும்

அந்தக் காலத்து கிராமத்து வீடு ஒன்றில் ஒரு மர அலமாரி ஒன்று இருந்தது. அந்த அலமாரியில் அந்த வீட்டுத் தாத்தாவின் பழைய புத்தகங்கள் இருந்தன. அதோடு தமிழ்த் தாத்தாவின் கண்களில் இருந்து தப்பித்த சில ஓலைச்சுவடிகள் இருந்தன. தாத்தா படுத்த படுக்கையாகி விட்டபின் அந்த அலமாரியை யாரும்  திறப்பதுகூடக் கிடையாது. அதில் இரண்டு கரப்பான் பூச்சிகள் வசித்து வந்தன. அதில் ஒன்று ஆண் கரப்பான் பூச்சி. மற்றொன்று பெண். இரண்டும் அந்த அலமாரி இடுக்குகளில் அங்கும் இங்கும் […]

Continue Reading