மெட்டு
கண்ணனே நீ வர காத்திருந்தேன்
படம் : தென்றலே என்னை தொடு
இசை : இளையராஜா
எழுத்து : கவியோகி நாகசுந்தரம்
குரல் : ஸ்ரீமதி அபர்ணா
கருத்து : உறவின் மேன்மை
அன்புக்கே அனைவரும் ஏங்குகிறார்
மனதினில் மாறுகின்றார்
உன்னித்து உன்மனம் நோக்குகின்றார்
தன்னுடன் வாழுகின்றார்
ஒவ்வொரு காலையின் வேளையிலும்
உறவினர் ஞாபகமே
பற்பலர் கூடியே உண்ணுகின்றார்
அற்புத நாடிதுவே
பந்துக்கள் அன்புடன் தன்னருகே
அன்புக்கே அனைவரும் ஏங்குகிறார்
மனதினில் மாறுகின்றார்
உறவழகே நாவழகே உறவருகே
காலம் பாத்து பழகல் தவறா சரியா
வேணும் போதில் சாடும் சாடல் புதிதா பழசா
உள்ளிருக்கும் அன்பது என்பது
கைகொடுக்கும் உறவது உறவது
என்னென்ன கூறியும் உதவிட உதவிட
தள்ளிய போதிலும் காத்திட காத்திட
கோடையில் வாடிய குடையினில் தாங்கிட
கண் நான்
அன்புக்கே அனைவரும் ஏங்குகிறார்
மனதினில் மாறுகின்றார்
உன்னித்து உன்மனம் நோக்குகின்றார்
தன்னுடன் கார்த்து வாழுகின்றார்
ஆசை தீர பேச வேண்டும் உறவே வரவா
நாலு பேர்க்கு நன்மை நடக்கும் நலமா நலமா
கண் அயரும் சாப்பிட சாப்பிட
எங்கெங்கு போயினும் கூப்பிட கூப்பிட
இல்லங்கள் யாவிலும் தங்கிட தங்கிட
ஊர்களில் வந்திட உணவையும் தந்திட
யார் … ம்ம்ம்ம்
அன்புக்கே அனைவரும் ஏங்குகிறார்
மனதினில் மாறுகின்றார்
உன்னித்து உன்மனம் நோக்குகின்றார்
தன்னுடன் கார்த்து வாழுகின்றார்
ஒவ்வொரு காலையின் வேளையிலும்
உறவினர் ஞாபகமே
பற்பலர் கூடியே உண்ணுகின்றார்
அற்புத நாடிதுவே
