ஆனந்தம் உனக்குள்ளே
இருக்கு என்றார்
ஆனந்தப் பெயர் கொண்ட
அந்த விவேகானந்தர்
ஏனென்று கேட்டு விடு
எதைச் செய்தாலும்,
வீணாக ஆக்காதே
உன் வாழ்க்கை என்றார்.
பாதரசம் கட்டுவது கடினம் அறிவோம்
அதைவிட உன் மனமதை
கட்டுவது மிகக் கடினம் என்பார்
வேதத்தை ரசமாக்கி
வேதாந்தம் சொன்னார்
பேதமின்றி பிரவசனத்தில்
பிரதர் சிஸ்டர் என்றார்
அன்புக்கு அடங்கிடலாம்
அதுவே ஆற்றல் என்பார்
பண்போடு வாழ்ந்துவி்டு அதுவே
பரலோகம் என்பார்
பெண்களை பார்த்து விடு
பெற்ற அன்னை உருவில்
கண்மணியாம் அவரெங்கள்
கடவுள் என்பார்
உன்மனியாம் உயரத்தில் ஏற ஏற
மின்மினியாம் மாயை இந்த
மேதினி என்பார்
பலமேதான் வாழ்க்கை எனில்
பலகீனம் மரணம் என்பார்
தலைகீழாய் நின்றாலும்
நிலை மாறாதே என்பார்
கீதை சொல்வார் செல்லும்
பாதை சொல்வார்
நிதமும் தொழுது விடு தெய்வத்தை
நாளும் நலமே என்பார்
உள்ளத்தில் இறைகாணல்
உயர் சித்தி என்றே
இளைய தலைமுறைக்கு
இதமாய் சொல்வார்
வேதாந்தம் வெறும் பேச்சல்ல
வாழும் வாழ்க்கை என்பார்
பார்க்கும் உயிரெல்லாம்
பர தெய்வம் என்பார்
கோர்த்த மாலையிந்த உலகம்
பிராணன் என்பார்
ஆயிரம் முறை தோற்றாலும்
ஒயிலாய் எழுந்திரு என்பார்
அடுத்து வரும் வெற்றி என்று
அறைகூவல் விடுப்பார்
எழுந்திருங்கள் இளைஞர்களே
சோம்பர் கெடுதி என்பார்
விழித்துக்கொள் விரைவாக
வரும் காலன் என்பார்
அவர் செய்த உபதேசம்
அனைவரும் கேட்போம்
தடுக்கி விழுந்தாலும்
திரும்ப எழுந்து கொள்வோம்

Best…
Excellent
Thanks Karthi