பண்டரிபுரம் போகலாமே
பாண்டு ரங்கனைப் பார்க்கலாமே
பாரில் வீணாய் திரிவதை விட்டு (ப)
பண்டு வாழ் பக்தர்கள் பார்க்கும் இடம்
தண்டனாய் விழுந்து தரிசிக்கும் இடம் (ப)
ஒரு செங்கல்லில் இறைவன் நின்ற இடம்
பெரும் பக்தர்கள் பஜனை செய்யும் இடம் (ப)
களிப்பது உண்மையாய் கொட்டும் இடம்
வழித்துணையாய் பக்த மீரா வசித்த இடம் (ப)
நாளைக்கு போகலாம் என்று இருக்காதே
காலையில் காலன் கொண்டு போலாமே (ப)
தம்புரா ஜால்ரா சத்தம் கேட்க வில்லையோ
சம்புவும் ஜபித்திடும் எட்டக்ஷரம் இல்லையோ (ப)
சம்சாரம் சாகரம் என்று தெரியுமோ அற்பம்
கம் என்று இருந்தால் காலை சுற்றுமே சர்ப்பம் (ப)
