பக்தர்களே வாருங்கள் பண்டரினாதனை காணுவோம் வாருங்கள் (ப)
ஒற்றைக் கல்லில் நின்று
இடுப்பில் இரண்டு கை வைத்து
நம்மை எதிர்பார்த்து நிற்கிறான் பாருங்கள் (ப)
ஏகனாதரின் அபங்கத்தை பாடுவோம்
துகாராமின் தோத்திரம் சொல்லுவோம்
கபீர் தாசரின் கருத்தினை கொள்ளுவோம்
தபமாக இதை எல்லாம் எதிர்நோக்கி நிற்கிறான் (ப)
கால்கடுக்க நிற்கிறான் கடுகி வாருங்கள்
கை கோர்த்து நிற்கிறான் கைவீசி வாருங்கள்
பண்டரி புரம் செல்லும் பாதை எல்லாம் பக்தர்கள்
இன்றே கிளம்புங்கள் தாமதம் ஏனுங்கள் (ப)
