பண்டரி நாதனை நம்பு பாதை தவற மாட்டாய்
விட்டலனை நம்பு வீண் போக மாட்டாய்
பிள்ளைக் குட்டியை நம்பாதே
பின்னர் புலம்பலே மிச்சம்
அள்ளித் தந்தாலும் அலக்ஷியமே மிஞ்சும்
உறவும் பகையும் உனக்கேன் இங்கே
நிரந்தர உறவு நிற்கிறான் அங்கே
பரபரக்கும் வாழ்வு ஒரு பகல் கனவு
சிறந்திடும் வாழ்வு சத்தியம் உணரு
பக்தருக்காக எதிர் நோக்கி நிற்கிறான்
முக்தியை தரவே குருவாய் வருகிறான்
அக்கம் பக்கம் யாரையும் பார்க்காதே
இக்கணமே கிளம்பு ஏனின்னும் பொறுப்பு

விட்டல விட்டல விட்டலபாண்டுரங்கா