எமதர்ம ராஜனே உன்னை
அந்தகன் என்று யார் சொன்னது?
நீ அருகில் இருப்பது தெரியாமல்
இருக்கும் நாங்கள்தான் உண்மையில் குருடர்கள்.
நீ கதவருகில் இருக்கிறாய் என்று
தெரிந்தும் கதவுக்குள்
ரகசியம் பேசுகிறார்கள் மனிதர்கள்.
நாளைக்கு என்று ஒத்திப் போடுகிறோம் பல விஷயங்களை, உனக்குத் தான் தெரியும் அது நடக்குமா நடக்காதா என்று!
கூகிள் காலண்டர் கூட உன்னிடம் தோற்றுப் போய்தான் விடுகிறது!
எம தர்ம ராஜனே நீ ஒரு கர்ம யோகி !
உயிரை நீயே எடுத்தாலும் நோய் கொண்டு போனதாகத்தான் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
ஐ சீ யூ என்பதன் பொருள் நீ நோயாளியிடம் ஐ சீ யூ என்று சொல்லுகிறாய் போலும்!
வெண்டிலேட்டரில் இருந்து வெளியே வந்தவரை நீ லேட்டர் ஆன் என்று சொல்லி அனுப்புகிறாய் !
இறவா வரம் இறைவன் யாருக்கும் தருவதில்லை, அதனால் உனக்கு பணி நிறைவு என்றும் இல்லை!

Super