ஒரு கோடியிலே பெரும் கூட்டத்திலே
வெறும் மனிதன் எனை கண் பார்வையிலே
உற்று பார்த்து விட்டார் அது போதுமென்றே
கற்றுத் தேர்ந்து விட்டேன்
கடை ஏறி விட்டேன்!
இது வேண்டும் என்றோ இல்லை அது வேண்டாம் என்றோ கேட்க தோன்றவில்லை அது தேவை என்று மனம் நினைக்க வில்லை!
வாழ்வினிலே விடை தேடி மிக அலைதலுண்டு
கூழுக்கும் சிறு கஞ்சிக்குமே என்றும் காலம் போவதுண்டு
இன்று வரை என் வினையெல்லாம்
சென்று வரேன் என்று சொல்லி சென்றதுவே
காதில் விழும் சப்தமெல்லாம் எந்தன்
குருவென்றே நான்
கண்டு கொண்டேன்
ஆலப்போதில் அன்று
சொன்னதைத்தான்
போறப்போக்கில் நெஞ்சில்
நிறைத்து விட்டேன்
வாய் திறந்து சொன்னார் சேதியேன்று
வரிசையிலே பலர் நிற்கக் கண்டேன்
மோனத்திலே சொன்ன மொழியினை
நான் கேட்டு விட்டேன்
மணம் வீசியது எங்கும், யார் உணர்ந்தார் என்று தெரியவில்லை
போதமது ஆத்ம போதமென்று அன்று அருட்குருவும் சொன்னார்
வேதமது அது விளங்கி விட இன்று மோன மொழி அதில் லயித்து விட்டேன்
காலமது வந்து நிற்கையிலே காலால் உதைக்க என்றே சிவனாம் குருவும் வந்து எதிரில் நின்றார்
பெயரும் வேண்டாம் எந்த உருவும் வேண்டாம் அது உணரும் உணர்வு என்று
இன்று அறிந்து கொண்டேன்
குரு தத்துவமே எங்கும் நிறைந்ததென்று
பார் முழுதும் அந்த குரு வடிவை
பார்த்து ரசித்து விட்டேன்
சங்கையெல்லாம் தீர்த்து விட்டு அந்த சன்னதியில் வந்து நின்று கொண்டேன்

குருவே சரணம்