உதறி தள்ளி விடு காணும் இந்த உலகத்தை உதறி தள்ளி விடு (உதறி)
சந்திர பாகா நதியினிலே தலை முழுகி விடு
சம்சார தொல்லையினை உதறி தள்ளி விடு (உதறி)
விட்டலன் நாமம் என்ற ஒரு இனிப்பிருக்குது
அட்டகாசம் செய்யும் மாயை மிக கசப்பானது
பட்டும் பகட்டும் வீணாய் ஏனிருக்குது
எட்டும் தூரத்திலே ஏகாந்த மிருக்குது (உதறி)
பணமும் காசும் உலகில் பெரும் பாரமானது
கணக்கும் வழக்கும் ஏனோ பெரும் போராய் ஆனது
தனக்கும் பிறர்க்கும் சரியாய் பாகம் போடுது
கனக்கும் மனமது வெகு லேசாய் ஆனது (உதறி)
