கஷ்டம் வந்தால் அவன் காலடியை கட்டிப் பிடிப்பேன்
இஷ்டமுடன் என்னருகே வந்து கையைப் பிடிப்பான்
வேதாந்த சாத்திரங்கள் உணர்ந்திட வைப்பான்
பேதமில்லா அத்துவிதம் பாடம் சொல்லுவான்
உன்னுள்ளே இருக்குது பார் உவகை என்பான்
என்னுள்ளே நின்று கொண்டு என்னைத் தருவான்
உலகில் உள்ள இன்பமெல்லாம் உடனே தருவான்
கலகம் செய்யும் கொடு மனதை நின்றிட வைப்பான்
உவந்த சீடன் நீ என்றே உண்மைகள் சொல்வான்
கவர்ந்து எந்தன் உள்ளமதில் காட்சி கொடுப்பான்
மந்திரங்கள் தந்திரங்கள் மனதுள் பதிப்பான்
விந்தையான உலகிமிது உபதேசம் செய்வான்
பிறப்பில்லா பெரு நிலையை பெற்றிட வைப்பான்
கறந்த பால் கன்னலென கருத்துள் இனிப்பான்
தவம் செய்தேன் சத்குருவாய் இவனைப் பெற்றேன்
பவநோயை போக்கி விட்டு பரத்துள் இணைந்தேன்
