கல்கியின் செல்வன் !

 

பொன்னி நதிக்குக் கூட தெரியாது

அவன் தன் செல்வன் என!

புரிய வைத்தவர் கல்கி!

 

அருள்மொழி வர்மன் என்ற

வரலாற்றுப் பெயரை

பொன்னியின் செல்வன் என்ற

புதுமை பெயராக்கி

புதினத்தால் தந்த செல்வன் கல்கி!

 

கல்கியின் வந்தியத் தேவன் ஆடிப்பெருக்கைப்

பார்த்த விதத்தைப் படித்திருந்தால்

நிஜ வந்தியத் தேவனே

பொறாமை பட்டிருப்பான்!

 

புதினத்தின்

புதுமையிலும் புதுமை

ஆழ்வார்க்கடியானின் அறிமுகம்!

 

கல்கியின் ஆழ்வார்க்கடியான்

நாராயணா என்றால்

கடவுளே இதோ வருகிறேன் என்பார்

பாவம் மனிதர்கள் காதில்தான்

ஐயோ என்று விழுகிறது!

 

கல்கியின்

சதியாலோசனை மண்டபம்

பல த்ரில் படங்கள் கூட

தந்திராத அதிசயம்!

 

நந்தினியின் அழகை

கல்கி வர்ணித்ததைக் கேட்டால்

இன்றைய அழகுக்கலை

நிபுணர்கள் கூட

அட்வான்ஸ் புக் செய்து

விடுவார்கள்.

 

வெளி அழகைக் கண்டு

மயங்காதே!

அழகின் உள்ளே பகைமை!

கல்கி தந்த நந்தினி

பாத்திரத்தின் படைப்பு!

 

கல்கியின் குந்தவை

இன்றிருந்தால்

பிரதம மந்திரிக்கு

போட்டி இன்றியே

ஜயித்திருப்பாள்.

 

கல்கியின் பழுவேட்டரையர்

பெரிய மீசையைப் பார்த்தால்

இன்றைய இளைஞனும்

ஷேவ் செய்ய மாட்டான்!

 

கல்கியின்

கும்பகோணத்து ஜோதிடர்

பாத்திரம்

மூட நம்பிக்கை என்று கூறும்

பகுத்தறிவு வாதிகளே

வியக்கும் தந்திரம் !

 

பொன்னியின் செல்வனின்

ஒவ்வொரு வரியும்

வரியில்லாமல்

நமக்குக் கிடைத்த பொக்கிஷம்!

 

புதினத்தை

காவிரிக் கரையில் தொடங்கி

காவிரிக் கரையில் முடித்த விதம்

இன்றைய இயக்குனர்கள்

தெரிந்து கொள்ள வேண்டிய

மூலதனம்!

 

வந்தியத் தேவனின் குதிரை போல

கற்பனைக் குதிரையில்

நம்மை பிற் காலத்திற்கு

(டைம் மெஷின் போல)

அழைத்துச் சென்ற கல்கி

எழுத்தாளர் மட்டுமல்ல

அறிவியலாளரும் கூட!

 

எத்தனை சினிமாக்கள் எடுத்தாலும்

முடிவு பெறாத சரித்திரப் புதினம்

பொன்னியின் செல்வன் !

 

வெப் சீரியல்கள் கூட

எப்போது முடியும் என்று

எண்ண வைக்கும்,

ஆனால்

கல்கியின் பொன்னியின் செல்வன்

கடைசி அத்தியாயம் கூட

ஏன் வருகிறது என்று

ஏங்க வைக்கும்!

156

Author: admin

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments