தீபாவளி ஹைக்கூக்கள்

தீபாவளி அன்று விளக்கு ஏற்ற வேண்டும்

தெரு ஓரத்துக் கடையில் அழகான அகல் விளக்கு வாங்கினேன்
ஒளி பிறந்தது ஒரு ஏழைக் குடும்பத்தில் !

தீபாவளி அன்று பட்டாசு வெடி வெடிப்போம்
அந்த சத்தத்தில் காதில் விழாமல் போகட்டும் சண்டை பூசல்கள் !
ஒளியின் பிரகாசத்தை உள் வாங்கட்டும் மனது!

அமேசானில் தளத்தில் தீபாவளித் தள்ளுபடி தருகிறார்கள் !
புடவை ஆர்டர் செய்யலாமாவென்று
கேட்கிறாள் நெய்யும் நெசவாளர்
மகள் !
அவர்நெய்த புடவைதான் அவையென்று அவளுக்கு தெரியாது!

சுகரின் அளவு எவ்வளவு என்று கேட்கிறார்கள்,
தீபாவளிக்கு முன்னர்
கடையில் தீபாவளிக்கு பின்னர் டெஸ்ட் செண்டரில் !
என்ன செய்வது அளவுக்கு மீறித்தான் போய்விட்டது!

நரகாசுரன் இறந்ததை
தீபாவளியில் விளக்கேற்றி கொண்டாடுகிறோம்!
வருத்தப்பட வேண்டும் மனத்து நரகாசுரன் இறக்காமல்
இருப்பதைக் கண்டு!
மனம் இல்லாமல் போவதே மகிழ்ச்சியான தீபாவளி!

பொங்கிவரும் கங்கையே
அதிகாலை வீட்டிற்கு வருகிறாள் !
கார்ப்பரேஷன் தண்ணீர் கூட
புனிதமானது அவள் வருகையால் நம்வீட்டில் !
கங்கை நதியை சுத்தம்செய்ய பிராஜக்ட் இருக்காம்!

நிர்விகல்ப சமாதி நீண்டு நிலைத்து நிற்கட்டுமே
தீப வரிசை போல் உள்ள அதுவே உன்மைத் தீபாவளி!
மற்றவையோ
வெறும் புஸ்வாணம் தான்!

171

Author: admin

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments