(ஐம்பத்து ஐந்து வயது தொடக்கத்தில் எழுதிய ஹைக்கூ கவிதை)
ஐம்பத்து ஐந்தில்
பேசாமல் இருந்தது பத்துமாதம்
அன்னை வயிற்றில்
கண்ணாடியில் தெரிந்தது
அழகான முகம் மட்டுமல்ல
எந்தன் வயதும்தான்
நரைக்கு வருந்துவதில்லை
வயசானவர் வழிவிடுங்கப்பா என்ற
மதிப்பில் மகிழ்கின்றேன்
இன்றைய நாள்
எனக்கு கிடைத்த போனஸ்
நாளையோ கின்னஸ்
போதும் பிறவி
சுமப்பது சுகம் என்று
அன்னை நினைத்தாலும்
நான் பிழைக்க
பத்து மாதம் இறந்து
பிறந்தாள் அன்னை
ஒளி மங்குகிறது
வயது ஏறியதால் அல்ல
கையில் கைபேசி
பகலவன் உதிப்பது
நாள் கூடுவதால் அல்ல
நிலவு (வயது) தேய்வதால்
நான்மறை நவிலும்
வெள்ளரிக்காய் போல் வாழ்வு
விடுபட வேண்டும்
பிரம்மன் எழுதிவிட்டான்
நம் பிறந்த நாளில்
இறக்கும் நாளை
இரண்டு சொற்கள்
பிறந்தநாள் வாழ்த்துகள் என்று
ஆயிரமாய் மகிழ்ந்தேன்

சுந்தர கவியோகி நாகசுந்தரம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்