மெட்டு : மௌனமான நேரம் ….
எழுத்து & கற்பனை : கவியோகி
இசையுடன் பாடியவர் : சூர்யா
கருத்து : இந்த காதல் பாடல் மௌன குரு ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி சனகாதிகளுக்கு சொன்ன மௌன மொழியை கருத்தாக கொண்டது.
மெளனமான நேரம்
என் மனதில்
இல்லை பாரம்
மெளனமான நேரம்
என் மனதில்
இல்லை பாரம்
மனதின் ஆசைகள் மொழியோ
மௌனங்கள்
மனதின் ஆசைகள் மொழியோ
மௌனங்கள்
நான் என்று உணருங்கள்
இது மெளனமான நேரம்
என் மனதில்
இல்லை பாரம்
சரணம் 1
வினையின் சுமையை
மனம் தாங்கிக் கொள்ளுமோ
விளம்பும் பதிலை மனம்
தேடிக் கொள்ளுமோ
அடிக்கும் ஓர் மணி
விதிக்கும் ஓர் வழி
கூடலான என்பதி
காலகால மந்திரி
நீ வந்து ஆதரி
மெளனமான நேரம்
என் மனதில்
இல்லை பாரம்
சரணம் 2
அவரின் மனதில் இன்னும் அவித்தை
மீதமோ
அடியில் மலர்கள் பாதம் வைக்கும் நேரமோ
வாதை நீங்கியே வேதம் ஆகுமோ
வாதை நீங்கியே வேதம் ஆகுமோ
காதில்லென்ன ஓதுமோ
கனவு என்று நம்புமோ
தனிமையோடு நிற்குமோ
மெளனமான நேரம்
என் மனதில்
இல்லை பாரம்
மனதின் ஆசைகள் மொழியோ
மௌனங்கள்
மனதின் ஆசைகள் மொழியோ
மௌனங்கள்
நான் என்று உணருங்கள்
இது மெளனமான நேரம்
என் மனதில்
இல்லை பாரம்
