உன்னைக் காதலிக்கிறேன் என்று
சொல்ல வந்தேன்
உன்னைப் பார்த்ததும்
என்னை மறந்தேன்
காதலைச் சொல்ல மறந்தேன் !
உன் விழியும் என் விழியும்
உரசிக் கொண்டதில்
உன்னைக் காதலிக்கிறேன் என்று
சொல்ல மறந்தேன்!
உன் கையைப் பிடித்துக்
கொண்டு காதலைச் சொல்ல வந்தேன்
உன் ஸ்பரிசம் பட்டதும்
நான் என்னை இழந்தேன்,
காதலைச் சொல்ல மறந்தேன் !
உனக்காகவே இந்த
உலகில் வாழுகிறேன் என்று
காதலைச் சொல்ல வந்தேன்
உன் மேனி வெளிச்சத்தில்
கண்கள் கூசி உலகம் மறைந்தது,
காதலைச் சொல்ல மறந்தேன் !
என்னுள் நீ இருக்கிறாய் என்று
காதலைச் சொல்ல வந்தேன்
நீ வந்தவுடன் நான் நீனானேன்,
யாரிடம் என் காதலைச்
சொல்வது?
காதலைச் சொல்ல மறந்தேன் !
கையில் ரோஜா மலருடன்
காதலைச் சொல்ல வந்தேன்
உன் அருகில் உன் உட்பி,
ரோஜாவின் முள் குத்தியது
காதலைச் சொல்ல மறந்தேன் !
நாளை வருவாய்
காதலைச் சொல்லலாம்
என்று காத்திருந்தேன்
நாளை மட்டுமே வந்தது,
நீ இல்லாமல்!
காதலைச் சொல்ல மறந்தேன் !
எதிர்காலத்தில்
என் காதலைச் சொல்லாம்
இன்று நிகழ் காலத்தில்
நின்றிருந்தேன்,
நீ வராமல் போனதால்
காதலைச் சொல்ல மறந்து,
என் வாழ்வு
இறந்த காலமாய்ப் போனது!
இருண்ட என் வாழ்வில்
உன்னால் ஒளி தோன்றும் என்று
நினைத்து காதலைச் சொல்ல வந்தேன்
கருப்புச் சேலையில்
கருப்புச் சிலையாய் நீ வர
நான் வெறும் சிலையானேன்,
காதலைச் சொல்ல மறந்தேன் !
உன் நினைவிலிருந்து
மீள்வதற்குள்
கனவாய்ப் போனது நம் காதல்
சொல்ல மறந்ததால்!
மறவாமல் இருக்க மருந்து
கண்டு பிடித்து விட்டார்களாம்
மிகவும் தாமதமாகி விட்டது!
சொல்ல மறந்த காதலால்
அவள் தொலை தூரம் சென்று விட்டாள்!
அடுத்த பிறவியிலாவது
அதிக ஐ கியுவுடன் பிறக்கிறேன்,
நீ என் எதிரில் வா!
இன்று சொல்ல மறந்த
காதலை மறக்காமல்
சொல்லி விடுகிறேன்!
