கோவர்த்தன மலை சுற்றி வருகையில்
எழுதியது : வேதாந்த கவியோகி நாகசுந்தரம்)
வடமொழியில் கோபிகா கீதம் கேட்டிருப்பீர்கள்
இன்று சற்று தெ(தே)ன்மொழியில் கோபனின் கீதம் கேளுங்கள்
மெட்டு : https://youtu.be/CAHaKBJdXG0
இவளுக்கிங்கே கண்ணா என்ன ஆச்சுதோ?
துவளும் மனத்தைதான் கண்ணா
அவளும் அறியாளே!
காலை எழுந்ததும் கண்ணா
வணக்கம் இல்லையே
வெண்ணெய் கடைந்துபின் கண்ணா
உண்ண தரவில்லை
இவளுக்கிங்கே கண்ணா என்ன ஆச்சுதோ?
துவளும் மனத்தைதான் கண்ணா
அவளும் அறியாளே!
பாலும் கசக்குது கண்ணா
துடிப்பு இல்லையே
மடியாய் குளித்திட்டால் கண்ணா
இடையில் இடிக்கிறாள்
இவளுக்கிங்கே கண்ணா
என்ன ஆச்சுதோ?
துவளும் மனத்தைதான் கண்ணா
அவளும் அறியாளே!
இறைவன் தாள் தொழ கண்ணா
நிறைவாய் நின்றிட்டேன்
சுரைக்காய் நைவேத்தியம் கண்ணா
தரையில் வைக்கிறாள்
ஏன் எதற்கென்றால் கண்ணா
உண்டி அவனுக் கென்பாள்
இவளுக்கிங்கே கண்ணா
என்ன ஆச்சுதோ?
துவளும் மனத்தைதான் கண்ணா
அவளும் அறியாளே!
பசிக்கு தா என்றால் கண்ணா
பார்க்காமல் செல்கிறாள்
வசிக்கும் வீடிதோ கண்ணா
நிசிக்கு செல்கிறாள்
இவளுக்கிங்கே கண்ணா
என்ன ஆச்சுதோ?
துவளும் மனத்தைதான் கண்ணா
அவளும் அறியாளே!
இசைத்து பாடினேன் கண்ணா
ராகம் எதுவென்றால்
புல்லாங்குழலோசை கண்ணா
கொள்ளை கொள்ளு தென்பாள்
இவளுக்கிங்கே கண்ணா
என்ன ஆச்சுதோ?
துவளும் மனத்தைதான் கண்ணா
அவளும் அறியாளே!
எந்தன் ஊருக்கு கண்ணா
செல்ல வேண்டுமே
எதுவும் பதிலில்லை கண்ணா
அவள் சிந்தை இல்லையே
இவளுக்கிங்கே கண்ணா
என்ன ஆச்சுதோ?
துவளும் மனத்தைதான் கண்ணா
அவளும் அறியாளே!
குழந்தை அழுகிறா கண்ணா
பாலைக் கொடுக்கிறா
பாவம் இல்லையே கண்ணா
பார்வை உன்னிடம்
இவளுக்கிங்கே கண்ணா
என்ன ஆச்சுதோ?
துவளும் மனத்தைதான் கண்ணா
அவளும் அறியாளே!
அவள்
நெற்றி கை வைத்து கண்ணா
சுரமா உனகென்பேன்
சுரத்தை கேட்பா யோவென கண்ணா
சைய்கை செய்கிறாள்
இவளுக்கிங்கே கண்ணா
என்ன ஆச்சுதோ?
துவளும் மனத்தைதான் கண்ணா
அவளும் அறியாளே!
கட்டி முத்தத்தை கண்ணா
கன்னம் தருவேனே
உணர்வு இன்றியே கண்ணா
என்னைப் பார்க்கிறாள்
இவளுக்கிங்கே கண்ணா
என்ன ஆச்சுதோ?
துவளும் மனத்தைதான் கண்ணா
அவளும் அறியாளே!
புலம்பித் தவிக்கிறேன் கண்ணா
அவள் மனத்தை அருள்வாயே
கோபன் குரலை நீ கண்ணா
இடையில் கேட்பாயே
தாபம் கொள்கின்றேன் கண்ணா
தரிசித்திடுவேனோ
